சிறைவாசம் சென்று பட்டிதொட்டி எங்கும் பயணித்து மாநில முதல்வரான கதை

2019 தேர்தலில் வெற்றி பெற்று, மே 30ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் தான் 16 மாதங்கள் சிறைவாசம் சென்றவர். காரணம் என்ன? யார் இவர்?

யார் இந்த ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி?

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

முன்னால் ஆந்திர மாநில முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனாகிய இவர் திசம்பர் 21, 1972 ஆம் ஆண்டு ஆந்தர மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவென்டுலா என்னும் இடத்தில் பிறந்தார். தனது பள்ளி படிப்பை ஹைதராபாத் பொதுப் பள்ளியில் முடித்த பின்னர், நிசாம் கல்லூரியில் பி.காம் மற்றும் எம்.பி.ஏ பட்டங்களை பெற்றார்.

ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணம்

தொழிலதிபரான இவர் 2004 ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், பின்னர் 2009 ஆம் ஆண்டு கடப்பா தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் பயணத்தில் முக்கியத் திருப்புமுனை

2009 ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வருமான ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி காலமானார்.

தந்தையும் மகனும்

அவர் தந்தை இறப்பால் அவருக்கு விசுவாசமாக இருந்த சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அதனால் 6 மாதங்களுக்குப் பின்னர் அவர்களது குடும்பங்களை சந்திக்க ஆறுதல் பயணத்தை அவர் தொடங்கினார்.

அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் கட்சி அவரது பயணத்தைக் கைவிடும்மாறு உத்தரவிட்டது. அதற்கு அவர் இது தன் தனிப்பட்ட விவகாரம் என்று கூறி கைவிட மறுத்துவிட்டார்.

பின்னர் 2010 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

டிசம்பர் 7, 2010 அன்று, இன்னும் 45 நாட்களில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்தார். ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் என்னும்  புதிய கட்சியை 2011, பிப்ரவரி 16ஆம் நாள் தொடங்கினார்,

நேர்ந்த இன்னல்கள், சந்தித்த தேர்தல்கள்

2011 ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் 5,45,043 வாக்குகள் வித்தியாசதில் வெற்றி பெற்றார்.

2012 இல், சொத்து குவிப்பு வழக்கில் 16 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த போதிலும் தெலுங்கானாவை தனி மாநிலமாக அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 125 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தார், பின்னர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

16 மாதங்கள் சிறையில் இருந்த போதிலும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மொத்தம் 175 தொகுதிகளில் 67 தொகுதியில் மட்டுமே வெற்றி கண்டார். எனினும் அவர் வெற்றியை 2% வாக்கு வித்தியாசத்திலேயே நழுவ விட்டார்.

பின்னர் புதிய கட்சிக்கு ஆதரவு திரட்ட 3000 கி.மீ  பாதையாத்திரையை மேற்கொண்டார்.

13 மாவட்டங்களில் 125 சட்டமன்ற தொகுதிகளில் 430 நாட்கள் நடைபெற்ற இந்த பயணம், 2017 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி, 2019ம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் அவர் 3648 கி.மீ பயணித்திருந்தார்.

இதற்கு இடையில் அக்டோபர் 28, 2018 ஆம் நாள் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக ஹைத்ராபாத் செல்ல விசாகபட்டினம் விமான நிலையம் வந்த போது அவர் மீது கத்தியால் தாக்குதல் நடந்தது. அதில் அவரது தோளில் காயம் அடைந்தது.

இவ்வளவு இன்னல்களைத் தாண்டி 2019ல் நடந்த சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களிலும், 25 மக்களவைத் தொகுதிகளில் 22 இடங்களிலும் வெற்றி பெற்று மே 30, 2019ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தனிச்சிறப்புகள்

கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவுதளைத் தடுப்பதற்காக புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்தார். எவரேனும் பிற கட்சி உதவியோடு வெற்றி பெற்று விட்டு தனது கட்சியில் சேர நினைத்தால், அந்தப் பதவியை துறந்துவிட்டு தான் சேர வேண்டும் என்னும் கட்டுப்பாட்டை விதித்தார்.

மேலும், கட்சி தொடங்கிய குறுகிய காலங்களில் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறல், 16 மாதங்கள் சிறையில் இருந்து வெளிவந்த போதிலும், வெறும் 2% வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழத்தல், 23 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 மக்களவை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுதலைத் தாங்கிக் கொள்ளுதல், மக்களின் ஆதரவை நாடி 3648 கி.மீ யாத்திரை மேற்கொள்ளுதல், போன்றவை இவரின் தனிச்சிறப்பையும் மனவலிமையையும் வெளிப்படுத்துகின்றனர்.

வித்தியாசமான அணுகுமுறை

ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதிவியேற்ற ஒரு வாரத்தில் அவரது அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் இணைந்தனர்.

இந்திய அரசியலில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் முதல்முறையாக 5 துணை முதலமைச்சர்களை நியமித்துள்ளார்.

பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், கபூ சமூகத்தினர் என ஜாதிய அடிப்படையில் இந்த 5 பிரிவினரையே அவர் நியமித்துள்ளார். தன் திட்டங்களை மக்களிடம் எளிமையாக சேர்ப்பதற்கே இத்தனை துணை முதல்வர்களை நியமித்தாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனப்படி, துணை முதல்வர் என பதவி வகித்தாலும் ஒரு அமைச்சருக்கான அதிகாரம் மட்டுமே அவர்களுக்கு இருக்கும்.

மேலும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அப்போது மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started